×

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் இந்தியாவுக்கு 80வது இடம்

புதுடெல்லி; உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா 80வது இடத்தில் உள்ளது. உலகின் வலுவான, பலவீனமான பாஸ்போர்ட் தரவரிசை குறித்து ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து அடிப்படையில் பாஸ்போர்ட்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் அனுமதி பெற்ற பாஸ்போர்ட்கள் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகிய நாடுகள் முதல் இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் வைத்து இருப்பவர்கள், 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். தென்கொரியா, ஸ்வீடன், பின்லாந்து நாடுகள் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் வசதியை பெற்றுள்ளதால் 2ம் இடத்தையும், ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, நெதர்லாந்து நாடுகள் 3வது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்த பட்டியலில் இங்கிலாந்து 4வது இடத்திலும், அமெரிக்கா, கனடா 7வது இடத்திலும் உள்ளன. இந்தியா 80வது இடத்தில் உள்ளது. இந்தியா பாஸ்போர்ட் மூலம் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். 62வது இடத்தில் சீனா உள்ளது. பாகிஸ்தான் 101வது இடத்திலும், ஈராக் 102வது இடத்திலும், சிரியா 103 இடத்திலும், ஆப்கன் 104வது இடத்திலும் உள்ளன.

The post உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் இந்தியாவுக்கு 80வது இடம் appeared first on Dinakaran.

Tags : India ,New Delhi ,Henley Passport Index ,
× RELATED இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் 24 மணி...